Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வெனிசுலா சிரேஷ்ட அதிகாரிகளுக்கு எதிராக கனடா தடை

In கனடா
Updated: 10:47 GMT, Sep 25, 2017 | Published: 08:45 GMT, Sep 25, 2017 |
0 Comments
1096
icon_com
This post was written by : Risha
Nicolas-Maduro

வெனிசுலா ஜனாதிபதி நிக்கலோஸ் மதுரோ உள்ளிட்ட 40 சிரேஷ்ட அதிகாரிகளுக்கு எதிராக தடைகளை விதிக்கவுள்ளதாக கனடா அறிவித்துள்ளது.

அவர்களது ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக தண்டனை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இவ்வாறு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கனடாவின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, அதிகாரிகளின் சொத்துக்களை முடக்குவதற்கும், கனடாவிற்கும் வெனிசுலாவிற்கும் இடையிலான உறவை துண்டிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெனிசுலாவிற்கு எதிரான தடை தீர்மானமொன்றை அமெரிக்கா முன்னெடுத்திருந்த நிலையில், அதே நடவடிக்கையை தற்போது கனடாவும் பின்பற்றவுள்ளது.

ஜனாதிபதி மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிராக பல மாதங்கள் நீடித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 125 பேர் உயிரிழந்த நிலையிலேயே இத்தடைத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி மதுரோ நாட்டை சர்வாதிகாரத்தின் விளிம்பிற்கு கொண்டு வந்ததுடன், நாட்டை மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கியதாகவும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளiயும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg