Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அஸீட் வீச்சு தாக்குதலில் அறுவர் காயம்

In
Published: 04:32 GMT, Sep 24, 2017 |
0 Comments
1209
icon_com
This post was written by : Suganthini

கிழக்கு லண்டனின் ஸ்ட்ராட்போர்ட் பகுதியில் இடம்பெற்றுள்ள அஸீட் வீச்சுத் தாக்குதலில் 6 பேர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, 15 வயதுடைய சிறுவன் ஒருவனை சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்ராட்போர்ட் பகுதியில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றிலேயே நேற்று (சனிக்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்புச் சம்பவத்தின்போதே, இந்த அஸீட் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 6 பேரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg