Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பட்டாசு ஆலையில் பரவிய தீ: தொழிலாளர்கள் உயிரிழப்பு

In இந்தியா
Published: 05:41 GMT, Sep 25, 2017 |
0 Comments
1103
icon_com
This post was written by : Kemasiya
dfedf

ஜார்கண்ட் மாநிலம் குமார்துபி பகுதியில் பட்டாசு ஆலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயடைந்தள்ளனர்.

ஜார்கண்ட் குமார்துபி பகுதியில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை (திங்கள் கிழமை) ஆலையின் வெடிமருந்து சேமிப்பு கிடங்கின் அருகே திடீரென தீ பிடித்ததில் 8 பேர் கருகி உயிரிழந்துள்ளதாகவும், 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் இதுவரையான தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்  5 வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்த பெரிதும் முயற்சி செய்துள்ளனர். ஆயினும் வெடிகுண்டு வெடிப்பதை போன்று சத்தத்துடன் பரவிய தீ பெரிதளவில் சேதத்தை ஏற்படுத்தியள்ளது.

இதனால் அப் பகுதியில் பதற்றமாக நிலைமை காணப்படுவதோடு. இது குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg