Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கணக்கு மற்றும் தணிக்கை சி.ஏ.ஜி தலைவராக ராஜிவ் மஹ்ரிஷி

In இந்தியா
Published: 06:16 GMT, Sep 25, 2017 |
0 Comments
1105
icon_com
This post was written by : Kemasiya
201709251051398999_Rajiv-Mehrishi-takes-oath-as-the-Comptroller-and-Auditor_SECVPF

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கணக்கு மற்றும் தணிக்கை துறை புதிய தலைவராக ராஜிவ் மஹ்ரிஷி பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று (திங்கள் கிழமை)  நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராஜின் மஹ்ரிஷிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் மத்தியஅமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்தியாவின் மிக முக்கியமான தன்னாட்சி அந்தஸ்து பெற்ற மத்திய கணக்கு மற்றும் தணிக்கை (சி.ஏ.ஜி) அமைப்பானது அரசால் கொண்டுவரப்படும் அனைத்து திட்டங்களுக்குமான வரவு மற்றும் செலவுகளை சரிபார்க்கிறது.

இந்த அமைப்பின் தற்போதைய தலைவராக உள்ள சஷிகாந்த சர்மாவின் பதவிக்காலம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்ததை தொடர்ந்து  மத்திய உள்துறை அமைச்சக செயலாளராக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற ராஜீவ் மஹ்ரிஷி சி.ஏ.ஜி.யின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg