Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் சுழற்பந்து வீச்சாளராக களமிறங்கும் தோனி!

In கிாிக்கட்
Updated: 11:48 GMT, Sep 25, 2017 | Published: 11:48 GMT, Sep 25, 2017 |
0 Comments
5785
This post was written by : Surenth

இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவரும் விக்கெட் காப்பாளருமான மகேந்திரசிங் தோனி, சுழற்பந்து வீச்சி பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிலையில், அவர் இவ்வாறு பயிற்சியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

துடுப்பாட்டம், விக்கெட் காப்பாளர், போட்டியை முடித்து வைப்பவர் என பல்வேறு திறமைகளை வெளிக்காட்டும் தோனி பந்துவீச்சி பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தான் சகலதுறைகளிலும் சாதிக்க வேண்டும் என தோனி, பல்வேறு சந்தர்ப்பங்களில் கருத்து தெரிவித்து வரும் நிலையில் மீண்டும் சுழற்பந்து வீச்சி பயிற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg