Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Updated: 16:07 GMT, Sep 25, 2017 | Published: 16:06 GMT, Sep 25, 2017 |
0 Comments
1428
This post was written by : Sivaguru Siva

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் வடகொரியா மீது போர்ப்பிரகடனம் செய்துள்ளதாக வடகொரிய வெளிவிவகார அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்கா தனது படைபலத்தை வெளிக்காட்டும்வகையில், வட கொரியாவின் கிழக்குக் கடற்கரையோரமாக தனது போர்விமானங்களை பறக்கவிட்டநிலையில் இந்த புதிய குற்றச்சாட்டை வடகொரியா தொடுத்துள்ளது.
அத்துடன் அமெரிக்கப் போர்விமானங்கள் தனது வான்பரப்புக்குள் நுழையாமல் விட்டாலும் அருகில் பறந்தால் சுட்டுவீழத்தும் உரிமை தனக்கு உள்ளதாகவும் வடகொரியா குறிப்பிட்டுள்ளது

வடகொரியாவின் அணு ஆயுதத்திட்டம் தொடர்பாக, அமெரிக்காவும், வட கொரியாவும் கடுமையான வார்த்தைப்பிரயோகங்களை செய்துவருவதால் பதற்ற நிலைமை தொடர்வது குறிப்பிடத்தக்கது.

MW-FU938_merkel_20170925025743_ZH

ஜேர்மன் நாடாளுமன்ற தேர்தலில் அதிதீவிரவலதுசாரிகளுக்கு வாக்களித்த வாக்காளர்களை மீண்டும் தனது பக்கம் திருப்பவுள்ளதாக சான்சலர் அங்கலா மேர்கல் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் உலகப்போருக்குப்பின்னர் ஜேர்மனியின்  நாடாளுமன்ற வரலாற்றில் வலதுசாரி தேசியவாதகட்சியான ஏஃப்டி நாடாளுமன்ற ஆசனங்களை வெற்றிபெற்றுள்ள நிலையில் மேர்க்கலின் கருத்துவந்துள்ளது.

தற்போது 4-வது முறையாக ஜேர்மன் சான்சலராக தெரிவுசெய்யப்படும் மெர்க்கலின் அணி தனது புதியகூட்டணி ஆட்சிக்குரிய பங்காளர்களை தீவிரமாக தேடிவருகின்றது.

இதற்கிடையே ஜேர்மனியில் வெளிநாட்டவரின் ஆக்கிரமிப்பு இடம்பெறாமல் தடுப்பதற்கு போராடப்போவதாக ஏஃப்டி கட்சி இன்று சூளுரைத்துள்ளது.

_95048746_91f7c2e8-4849-43e1-95f2-483063f23fe5

உலகின் அதிக பருமனுடைய பெண்ணாக பதிவுபெற்ற எகிப்தியப்பெண்ணான இமான் அகமது இதய நோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக தனது 37-வது வயதில் அபுதாபி மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார்.

சுமார் 500 கிலோ நிறைகொண்ட இமான் சுமார் 25 ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்தார்.

இதனையடுத்து கடந்த பெப்ரவரிமாதத்தில் இந்தியாவில் சிகி;ச்சைபெற்ற அவருக்கு சுமார் 242 கிலோ எடைக்குறைப்பு இடம்பெற்றதாக மருத்துவமனை தெரிவித்தது. ஆனால் இமானின் சகோதரி இதனை மறுத்தார்.

இதன்பின்னர் கடந்த மே மாதம் மும்பையில் இருந்து அபுதாபிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு 20 சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழு சிகிச்சையளித்தது.  எனினும் இன்று அவர் உயிரிழந்ததாக அபுதாபி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

_98000669_sadiq.khan.pa

உலகளாவியரீதியில் பிரபலமான ஊபர் வாடகைக்கார் நிறுவனத்தின் சேவை உரிமத்தை புதுப்பிப்பதில்லையென லண்டன் போக்குவரத்து அதிகாரசபை( டி.எல்.எஃப்) முடிவெடுத்தநிலையில் ஊபர் நிறுவனத்துக்கும் லண்டன் முதல்வர் சாதிக்கானுக்கும் இடையில் முறுகல் எழுந்தது.

இதன்பின்னர் ஊபர் நிறுவனம் அவரிடம் மன்னிப்புக்கோரிய நிலையில்  இன்று ஊபர்நிறுவனத்தின் லண்டன் தலைவருடன் போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள் பேச்சு நடத்துவதற்கு முதல்வர் சாதிக்கான் உடன்பட்டுள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவை தொடர்பான பின்விளைவுகளைக் கவனத்தில் கொண்டு ஊபர் நிறுவனத்தின் சேவை உரிமத்தை புதுப்பிப்பதில்லையென்ற முடிவு எடுக்கப்பட்டதாக லண்டன் போக்குவரத்து அதிகாரசபை ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

rohingya-refugees-walk-through-bangladesh-camp-bazar_c15097c0-a1f6-11e7-b007-413935cf253f

ரொகிஞ்சா முஸ்லிம் ஆயுததாரிகள் 28 இந்துக்களை படுகொலைசெய்து புதைத்த இரண்டு பாரிய புதைகுழிகளைத் தாம் கண்டுபிடித்துள்ளதாக மியன்மார் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்

ராக்கைன் மாகாணத்தின் வடக்கு பகுதியில் இருந்த இந்தப்புதைகுழிகளில் 20 பெண்கள் மற்று எட்டு ஆண்களின் உடலங்கள்; இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மியன்மாரில் ரொகிஞ்சா மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் காரணமாக கடந்த மாத இறுதியிலிருந்து சுமார் நான்கு லட்சம் ரோஹிஞ்சா ஏதிலிகள் பங்களாதேசில் தஞ்சமடைந்தமை குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரொகிஞ்சா முஸ்லிம் ஆயுததாரிகள்  இந்துக்களை படுகொலைசெய்து புதைத்ததான குற்றசாட்டுகள் வந்துள்ளன

JAYALALITHAAajpg

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம்குறித்து விசாரணைசெய்வதற்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணைக்குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.

கடந்தவாரம் மதுரையில்இடம்பெற்றபொதுக்கூட்டத்தில் பேசியஅமைச்சர் திண்டுக்கல்சீனிவாசன் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது இட்லி உணவருந்தியதாக தாங்கள் பொய் சொன்னதாக குறிப்பிட்டார்.

அவரது இந்தஉரைஜெயலலிதா மரணம் குறித்து மீண்டும் சர்ச்சைகளைக்கிளறியது இந்த நிலையில், அவரது மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமியின் தலைமையில் விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கு தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg