Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தங்கம் கடத்தியவர் கைது!

In இலங்கை
Updated: 16:46 GMT, Sep 25, 2017 | Published: 16:46 GMT, Sep 25, 2017 |
0 Comments
1398
This post was written by : Ravivarman

ஒரு கிலோ கிராம் நிறைகொண்ட தங்கத்தை தன்னுடைய உடலில் மறைத்து வைத்து கடத்துவதற்கு முயன்ற ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்துள்ளதாக சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயவர்தன தெரிவித்தார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதானவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, கோயம்பத்தூருக்கு புறப்பட்டு செல்லவிருந்த ஸ்ரீலங்கன் விமானச் சேவைக்கு சொந்தமான யு.எல்.193 என்ற விமானத்திலேயே குறித்த தங்கத்தினைக் கடத்துவதற்கு முயன்றுள்ளார் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அவற்றின் நிறை 904.77 கிராம் எனத் தெரிவித்த சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயவர்தன, அவற்றின் பெறுமதி 45 இலட்சத்து 23ஆயிரத்து 850 ரூபாயாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் ஆபரணங்கள் அரச உடமையாக்கப்பட்டதுடன் அவருக்கு 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுங்க சுனில் ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.

IMG-20170924-WA0026 IMG-20170924-WA0025

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg