Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிறீஸில் ஊடக பணியாளர்கள் வேலைநிறுத்தம்

In
Updated: 12:02 GMT, Sep 26, 2017 | Published: 12:02 GMT, Sep 26, 2017 |
0 Comments
1212
This post was written by : Suganthini

கிறீஸ் நாட்டைச் சேர்ந்த ஊடகத்துறை சார்ந்த பணியாளர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) 24 மணிநேர வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஐரோப்பியன் கடன் வழங்குநர்களிடமிருந்து புதிய பிணையெடுப்பை பெறும் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஊடகத்துறை சார்ந்த பணியாளர்களுக்கான சுகாதாரப் பாராமரிப்பு நிதியை கிறீஸ் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஊடகத்துறை சார்ந்த பணியாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக அந்நாட்டு தொலைக்காட்சிகளில் எந்தவித நிகழ்ச்சிகளும் இன்றையதினம் ஒளிபரப்புச் செய்யப்படவில்லை என்பதுடன், இணையத்தளங்களிலும் செய்திகள் தரவேற்றம் செய்யப்படவில்லை.

இந்நிலையில், நாளை (புதன்கிழமை) பத்திரிகைகளும் வெளிவராது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகத்துறை சார்ந்த பணியாளர்களுக்கான சுகாதாரப் பராமரிப்பு நிதி இடைநிறுத்தப்பட்டமையை தொடர்ந்து, அந்த நிதியை மீண்டும் தமக்கு செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடமும் ஊடக நிறுவனங்களிடமும் ஏதேன்ஸ் ஊடகவியலாளர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg