Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டோனி சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட மாட்டாரா? சோகக்கடலில் முழ்கிய இரசிகர்கள்

In கிாிக்கட்
Published: 10:23 GMT, Sep 27, 2017 |
0 Comments
3183
This post was written by : Anojkiyan
MSD

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி, இம்முறை ஐ.பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவது கடினம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் நிகில் சோப்ரா கூறியுள்ளார்.

இரண்டு ஆண்டுகள் தடை முடிந்து அடுத்த ஆண்டு டோனி தலைமையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி களமிறங்கவிருந்த நிலையில், இந்த செய்தி ஒட்டுமொத்த இரசிகர்களையும் கோசகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து நிகில் சோப்ரா கூறுகையில், “ஐ.பி.எல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போகவுள்ள முதல் ஐந்து வீரர்களில் ஒருவராக டோனி இருப்பார். ஐ.பி.எல் தொடரில் தன்னுடைய தலைமைப் பண்பை டோனி நிரூபித்துள்ளதால் அவரைத் தேர்வு செய்யவே எல்லா அணிகளும் ஆர்வம் காண்பிப்பார்கள்.

இந்திய வீரர் ஒருவர் அணித்தலைவராக இருப்பதும் ஓர் அணிக்குச் சாதகமான விடயம். எனவே டோனியைத் தங்கள் பக்கம் இழுக்க அணிகள் கடும் முயற்சி செய்வார்கள்” என கூறினார்.

நடப்பு ஐ.பி.எல் ஏலத்தில் அதிகத் தொகை பெற்ற முதல் ஐந்து வீரர்களின் பட்டியலில் இந்தமுறை டோனி 16 கோடியை விடவும் அதிகம் ஏலம் போவார் என கணிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg