Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நீதிக்கு தலை வணங்கிய மலையக மக்கள்!

In இலங்கை
Published: 15:21 GMT, Sep 27, 2017 |
0 Comments
2211
icon_com
This post was written by : Ravivarman

படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா வழக்கு தொடர்பில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு மலையக மக்கள் நீதிக்கு தலை வணங்கி பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் கூட்டு வன்கொடுமையின் பின் மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த கொலையுடன் சம்பந்தப்பட்ட ஏழு பேருக்கு இன்று (புதன்கிழமை) மூன்று நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது.

பல வருட காலமாக இந்த வழக்கின் தீர்ப்பு எப்போது வரும் என்று எதிர்பார்த்திருந்த மலையக மக்கள் இன்று காலை முதல் ஊடகங்களின் ஊடாக வெளியான செய்தியை கேட்டு எந்த நேரத்தில் இவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்த வண்ணம் இருந்தனர்.

மரண தண்டனை கிடைத்த செய்தியை கேட்டு பூரிப்பு அடைந்த மலையக மக்கள் இந்த நாட்டில் இவ்வாறான இழிவான செயலில் ஈடுபட எண்ணும் நபர்களுக்கு ஒரு பாடமாக அமைந்து விட்டதாக இந்த தீர்ப்பை தந்த நீதிபதிகளுக்கு சிரம் தாய்த்து நன்றி தெரிவிப்பதாகவும், மலையக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது போன்று நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் காணப்படுகின்றது.

அனைத்து மாகாணங்களிலும் வாழ்கின்ற சிறுவர்கள் சுதந்திரமாக அச்சமின்றி அவர்களின் பயணத்தை தொடர இந்த தீர்ப்பு ஒரு பாடமாக அமைந்திருப்பதாக மலையக மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg