Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொடர்கிறது மழை: மண்சரிவு ஏற்படும் அபாயம்

In இலங்கை
Published: 05:03 GMT, Sep 28, 2017 |
0 Comments
1158
This post was written by : Varshini
rain

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருகின்ற நிலையில், நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்பகுதிகளில் வாழும் மக்களை விழிப்புடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் மேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல் வேளைகளில் அதிக காற்றுடன் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கடந்த சில நாட்களாக குறித்த மாகாணங்களில் பெய்துவரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg