Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்பின் கூற்றை நிராகரித்த ஃபேஸ்புக் நிறுவுனர்

In
Updated: 06:09 GMT, Sep 28, 2017 | Published: 05:41 GMT, Sep 28, 2017 |
0 Comments
1314
This post was written by : Risha

‘சமூக வலைத்தளங்கள் எப்போதும் தமக்கு எதிராகவே செயற்படுகிறது’ என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கருத்தை ஃபேஸ்புக் நிறுவுனர் மார்க் ஷுக்கர்பேர்க்  நிராகரித்துள்ளார்.

மொத்தமாக அனைத்து சமூக வலைத்தளங்களையும் டுவிட்டரில் சாடிய அமெரிக்க ஜனாதிபதி, அவற்றை ‘ட்ரம்ப் எதிர்ப்பு’ என்றும் முத்திரையிட்டார்.

அதேவேளை, நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வொஷிங்டன் போஸ்ட் ஆகிய பத்திரிகை நிறுவனங்கள் மீதும் அதே குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்நிலையில், ட்ரம்பின் டுவிட் குறித்து தொடர்ந்து பதிலளித்த ஃபேஸ்புக் நிறுவுனர், ”மக்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்கும், ஒரு சமூகத்தை உருவாக்குவதற்குமே நான் தினமும் உழைத்து வருகின்றேன்.

அத்துடன், அனைவரும் தங்களது கருத்துக்களை சுதந்திரமாக பகிர்ந்துக் கொள்ளும் ஒரு மேடையாக இதனை திகழ வைப்பதே எனது நோக்கம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg