Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இரசிகர்கள் எதிர்பார்த்திருந்த இந்தியா-தென்னாபிரிக்கா தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு

In கிாிக்கட்
Published: 05:49 GMT, Sep 28, 2017 |
0 Comments
1506
icon_com
This post was written by : Anojkiyan
poot

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்று வகை போட்டிகளுக்குமான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

நீண்ட தொடரில் விளையாடுவதற்காக தென்னாபிரிக்கா செல்லும் இந்திய அணி, மூன்று டெஸ்ட் போட்டி, 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று ரி-ருவென்ரி போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இந்நிலையில், இந்த தொடருக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 30-31ஆம் திகதி இரண்டு நாட்கள் கொண்டு பயிற்சி போட்டியில் இந்தியா அணி விளையாடவுள்ளது.

அதன்பின் டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு 5ஆம் திகதி ஆரம்பமாகின்றது. முதல் டெஸ்ட் அடுத்த ஆண்டு ஜனவரி 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை கேப்டவுனில் நடைபெறுகிறது. 2வது டெஸ்ட் 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை செஞ்சூரியனில் நடைபெறவுள்ளது. 3வது மற்றும் கடைசி டெஸ்ட் 24ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கிறது.

அதன்பின் ஒருநாள் போட்டி தொடர் பெப்ரவரி 1ஆம் திகதி டர்பன் மைதானத்தில் பகலிரவு போட்டியாக ஆரம்பமாகவுள்ளது. 2வது போட்டி பெப்ரவரி 4ஆம் திகதி செஞ்சூரியனில் பகல் போட்டியாகவும், 3வது போட்டி பெப்ரவரி 7ஆம் திகதி கேப்டவுனில் பகலிரவு போட்டியாகவும், 4வது போட்டி பெப்ரவரி 10ஆம் திகதி ஜோகன்னஸ்பர்க்கில் பகலிரவு போட்டியாகவும், 5வது போட்டி பெப்ரவரி 13ஆம் திகதி போர்ட் எலிசபெத்தில் பகலிரவு போட்டியாகவும், 6வது போட்டி பெப்ரவரி 16ஆம் திகதி செஞ்சூரியனில் பகலிரவு போட்டியாகவும் நடைபெறவுள்ளது.

இதனைதொடர்ந்து மூன்று ரி-ருவென்ரி போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டி பெப்ரவரி 18 ஆம் திகதி ஜோகன்னஸ்பர்க்கில் பகல் போட்டியாகவும், 2வது போட்டி பெப்ரவரி 21ஆம் திகதி செஞ்சூரியனில் பகலிரவு போட்டியாகவும், 3வது போட்டி பெப்ரவரி 24ஆம் திகதி கேப்டவுனில் பகலிரவு போட்டியாகவும், நடைபெறவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg