Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கார்த்தியின் ‘தீரன் – அதிகாரம் 1′ டீசர் வெளியாகியது

In சினிமா
Published: 07:31 GMT, Sep 28, 2017 |
0 Comments
1299
This post was written by : Varothayan

சினிமா அறிவிப்புக்களைப் பொறுத்தவரையில், எந்தவொரு நிகழ்வும் குறிப்பிட்டதைப் போல, குறிப்பிட்ட தினத்தில் இடம்பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு மத்தியில், ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல ‘தீரன் – அதிகாரம் 1′ படத்தின் டீசரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டுள்ளனர்.

காற்றுவெளியிடைக்குப் பிறகு கார்த்தி நடித்து வரும் படம் ‘தீரன் அத்தியாயம் 1′. இந்தப் படத்தை சதுரங்கவேட்டை வினோத் இயக்கி வருகிறார். அதில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இப்படம் துப்பறியும் கதையைக் களமாக வைத்து உருவாகி வருவதாக குறிப்பிடப்படுகிறது. அதற்கமைய, நேற்று வெளியிடப்பட்ட டீசர் பெரும் மிரட்டலாக உள்ளது. படத்தின் ஒளிப்பதிவு கனகச்சிதமாக உள்ளது. பாலைவனம் போன்ற பகுதி ஒன்றின் மண்ணில் இருந்து கார்த்தி தோன்றுவதாக டீசரை அமைத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் ட்ரெயிலர் அடுத்த மாதம் 17ஆம் திகதி வெளியாகிறது. படம் நவம்பர் 17ஆம் திகதி தமிழகம் எங்கும் திரைக்கு வருகிறது. இப்படம் தெலுங்கில் ‘காக்கி’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg