Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியல்வாதிகளின் வலையில் விழுந்த பெண் சிறையதிகாரிக்கு சிக்கல்!

In இலங்கை
Updated: 09:31 GMT, Sep 28, 2017 | Published: 09:31 GMT, Sep 28, 2017 |
0 Comments
1426
This post was written by : Varshini

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையின் பிரதி தலைமை மருத்துவ அதிகாரி நிர்மாலி தேனுவரவிற்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, குற்றப்புலனாய்வு பிரிவிடம் கோரவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தண்டனைக் கைதிகளாக சிறைக்குச் சென்ற, அரசியலுடன் தொடர்புடைய மற்றும் உயர் பதவிகளை வகித்தவர்களுக்கு, சிறைச்சாலைகள் சட்டத்தை மீறி சலுகைகளை வழங்கியதாக நிர்மாலி மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் சில அரசியல்வாதிகள் செயற்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே இவ்விசாரணையை கோரவுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக, சிறைச்சாலைகள் திணைக்களம் ஏற்கனவே பிறிதொரு விசாரணையை ஆரம்பித்துள்ளது. அத்தோடு, சுகாதார அமைச்சும் நிர்மாலியிடம் விசாரணை நடத்தியது. இவ்விசாரணை தொடர்பான அறிக்கையை குற்றப்புலனாய்வு பிரிவிற்கு சமர்ப்பிக்குமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை சுகாதார அமைச்சு பணித்துள்ளது.

சிறைச்சாலைகள் வைத்தியசாலையின் முன்னாள் பிரதி தலைமை மருத்துவ அதிகாரி தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பணிப்பின் பேரில், கடந்த 18ஆம் திகதி அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg