Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழகத்தில் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை!

In இந்தியா
Updated: 11:13 GMT, Sep 28, 2017 | Published: 10:39 GMT, Sep 28, 2017 |
0 Comments
1122
This post was written by : Surenth
Sengottaiyan

எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதிக்குள் தமிழகத்தில் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.

கல்வித் துறையின் சார்பில் மாநில அளவிலான நாடக விழாவை இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான, புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைக் குழுவில், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட பலர் அடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்ததும் அரச உத்தியோகம் செய்யும் அதிகாரிகளின் குழந்தைகளையும் அரசு பாடசாலைகளில் சேர்க்க முன்வரும் நிலை உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg