Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தனுஷுடன் இணையும் சாய் பல்லவி!

In சினிமா
Updated: 15:58 GMT, Sep 28, 2017 | Published: 15:58 GMT, Sep 28, 2017 |
0 Comments
1350
This post was written by : Vithushagan

பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு, தனுஷ், காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த  படம் மாரி திரைப்படத்தின் 2ஆம் பாகத்தில்  பாகத்தில் சாய் பல்லவி நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, இப்படத்தின் 2ஆம் பாகம் குறித்து வதந்திகள் பரவி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மாரி 2 படம் குறித்து முறையான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இயக்குனர் பாலாஜி மோகன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் முதல் மாரி 2 அப்டேட் என்றும்  அதில் வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறார் என்றும் அறிவிப்பு வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து இப்படத்தில் யார் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கயிருக்கிறார் என்ற கேள்வி எழுந்தது. தற்போது அதற்கும் விடை கிடைத்துள்ளது.

பிரேமம் புகழ் சாய் பல்லவி தான் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கிறார் என்று இயக்குனரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg