Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முன்பள்ளி சிறுவர்கள் சென்ற பேரூந்து விபத்து: 18பேர் படுகாயம்!

In இலங்கை
Updated: 08:41 GMT, Sep 29, 2017 | Published: 03:51 GMT, Sep 29, 2017 |
0 Comments
1727
This post was written by : Ravivarman

புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் முந்தல் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 பேர் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து இராஜங்கனை நோக்கி முன்பள்ளி சிறுவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேரூந்து முந்தல் 100 ஆவது மைல் கல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லொறியுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் தனியார் பஸ்ஸில் பயணித்த முன்பள்ளி சிறுவர்கள் உட்பட 18 பேர்கள் காயமடைந்துள்ளனர்.

இராஜங்கனைப் பகுதியில் இருந்து நேற்று கொழும்புக்கு சுற்றுலா சென்று விட்டு வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸே விபத்திற்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_3798 IMG_3801 IMG_3812 IMG_3825

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg