Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வன்கூவரில் மலையேறும் வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு

In கனடா
Updated: 08:11 GMT, Sep 29, 2017 | Published: 08:11 GMT, Sep 29, 2017 |
0 Comments
1217
This post was written by : Anojkiyan

வன்கூவரின் வடபகுதியில் மலை ஏறும் முயற்சியில் ஈடுபட்டிருந்த மலையேறும் வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த அந்த மலைப் பகுதியில் பாறைகள் சரிந்து வீழந்த சத்தங்களும், கூக்குரலும் கேட்டதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மலை விளிம்பு ஒன்றில் ஆண் ஒருவர் தவித்துக் கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும், மேலும் ஒருவர் அங்கிருந்து பல மீட்டர்கள் கீழே எந்தவித அசைவும் இன்றிக் கிடந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்டவர் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், தான் நின்ற இடத்திலிருந்து சுமார் 12 மீட்டர் உயரத்துக்கு ஏறிச் சென்ற தனது நண்பர், திடீரென தவறி வீழ்ந்ததாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை அந்த இருவருமே அனுபவம் வாய்ந்த மலையேற்ற வீரர்களாகவே தெரிவதாகவும், எனினும் இவ்வாறான அனர்த்தங்கள் விபத்துக்கள் எவ்வேளையிலும் நிகழக்கூடும் எனவும் மீட்புப்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg