Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு தொடர்பில் நிர்மலா சீதாராமன் பேச்சு!

In இந்தியா
Published: 10:40 GMT, Sep 29, 2017 |
0 Comments
1192
icon_com
This post was written by : Surenth
Niramala Seetharaman

ஜம்மு-காஷ்மீருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள, இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்குள்ள பாதுகாப்பு உயர் அதிகரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

குறித்த கலந்துரையாடலின் போது, எல்லையில் பாதுகாப்பு படைவீரர்களை தயார் நிலையில் வைத்திருப்பது குறித்தும், காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள இந்திய நிலைகளையும், லடாக்கில் இந்திய-சீன எல்லைப் பகுதியில் இந்திய நிலைகளையும் அவர் பார்வையிட உள்ளதாக பாதுகாப்புத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக ஜம்மு-காஷ்மீருக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg