Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அலறியடித்துக்கொண்டு ஓடிய மக்கள்! – வதந்தியால் 25 பேர் உயிரை விட்ட சோகம்

In இந்தியா
Published: 06:11 GMT, Sep 30, 2017 |
0 Comments
1141
icon_com
This post was written by : Puvanes

மும்பை ரயில் நிலையத்தில் பரவிய வதந்திச் செய்தி ஒன்றினால், சன நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மும்பை எல்பின்ஸ்டோன் சாலை ரயில் நிலையத்தில் உள்ள மேம்பாலம் ஒன்றில் ஒருநாளைக்கு சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் நடந்து செல்கின்றனர். குறித்த பாலத்தில் நேற்று திடீரென சனநெரிசல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 30இற்கும் மேற்பட்டோரில் 22 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் ஏற்பட முக்கிய காரணம் மின்சாரக்கசிவு ஏற்பட்டுள்ளதாக பரவிய வதந்தி ஒன்றே எனவும், வதந்தியை உண்மையென நம்பிய மக்களிடையே பதற்றம் ஏற்பட்டு உயிரைக்காப்பாற்றிக் கொள்வதற்காக ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு ஓடியதாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg