Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆதிபராசக்தியைப் போற்றும் விஜயதசமி

In ஆன்மீகம்
Published: 08:56 GMT, Sep 30, 2017 |
0 Comments
1155
icon_com
This post was written by : elayathambi
trivevi2222

உலகெங்கும் உள்ள இந்துக்கள் இன்று விஜயதசமியை கொண்டாடி மகிழ்கிறார்கள். மலைமகளாய்,திருமகளாய், கலைமகளாய்  வழிபட்ட மூன்று தேவியரும் ஒன்றாகி ஆதிபராசக்தியாய் அருள் நல்கும் நாளாக விஜயதசமி போற்றப்படுகிறது.

இன்று ஏடு தொடக்குவது முதல் புதிய முயற்சிகள் அனைத்தையும் நம்பிக்கையுடன் இந்துக்கள் முன்னெடுக்கிறார்கள். இன்றைய நன் நாள் குறித்த புராண இதிகாச கதைகள் பலவும் ஆன்மீகம் சார் செய்திகளும் இந்துக்களால் நம்பப்படுகிறது.

இராமாயணத்தில் குறித்த இந்த விஜயதசமி நாளில்தான் இராவணன் இராமனிடன் தோற்றுப் போகிறான் என்ற நம்பிக்கை உண்டு. மகாபாரதத்தில் அஞ்ஞாதவாசம் முடித்த  பாண்டவர்கள் தாம் ஆயுதங்களை மறைத்து வைத்த வன்னி மரத்தில் இருந்து அவற்றை மீளப் பெற்ற நாளாகவும் இது கருதப்படுகிறது.

அன்னை சக்தியை முழுமுதலாக வழிபடுவோரைப் பொறுத்தவரை, சக்தி வன்னி மரத்தில் ஒளிந்த, பண்டாசுரனை வதம் செய்த நாளாக இது கொண்டாடப்படுகிறது. இந்த விஜயதசமி நாளில் அன்னையின் பாதம் பணிந்து எல்லா நலனும் பெறுவோமாக!!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg