Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

26 அடி நீள மலைப்பாம்பு ஒருகிராமத்துக்கு உணவானது

In உலகம்
Updated: 09:56 GMT, Oct 5, 2017 | Published: 09:11 GMT, Oct 5, 2017 |
0 Comments
4191
This post was written by : Sivaguru Siva

இந்தோனேசியாவில் மனிதர்களுடன் போராடி வெற்றிபெறமுடியாத பெரியதொரு மலைப்பாம்பு இறுதியில் கிராமமக்களின் உணவுத் தட்டுகளில் சங்கமமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாரிய மலைப்பாம்புகள் அதிகளவில் காணப்படும் நாடுகளில் இந்தோனேசியாவுக்கு தனியிடம் உண்டு .

கடந்த மார்ச் மாதத்தில் தூக்கத்தில் இருந்தபோது காணாமல்போன ஒருவர் மலைப்பாம்பு ஒன்றின் வயிற்றுக்குள் இருந்து முழு உடலமாக மீட்கப்பட்டிருந்த சம்பவம் நினைவிருக்கலாம்.

அவ்வாறு மலைப்பாம்புகள் குறித்து பரபரப்பான செய்திகள் வெளிவரும் இந்தோனேசியாவில் கடந்த சனியன்று இன்னொரு முக்கிய சம்பவம் இடம்பெற்றது.

வீதியொன்றுக்கு குறுக்கேகிடந்த 7.8 மீற்றர் அல்லது 26 அடி நீளத்தில் இருந்த  பெரிய மலைப்பாம்பு ஒன்று தன்னை நெருங்கி வந்த றொபேட் நாபபன் என்ற பாதுகாப்பு காவலரை இழுக்க முயன்றது.

இதில் அவருக்கு காயமும் ஏற்பட்டது. இதனையடுத்து சீற்றங்கொண்ட அவரும் அந்த கிராம மக்களும் அந்த பெரியமலைப்பாம்பை கொன்றுவிட்டனர்.

_98147719_042178972-1

7.8 மீற்றர் நீளமுள்ள இந்த மலைப்பாம்பை முதலில் காட்சிப்படுத்திய  மக்களுக்கு அதன் சதைப்பிடிப்பைக் கண்டவுடன் அதனை உண்ணும் ஆசை ஏற்பட்டது.

இதனையடுத்து  அதனை துண்டு துண்டாக வெட்டிய கிராமமக்கள் ஒவ்வொரு வீட்டிலும் அதனை பொரித்து உண்டும் விட்டனர்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg