Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்புடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய பிரித்தானியா முயற்சி: கிளிங்டன் எச்சரிக்கை

In
Updated: 08:50 GMT, Oct 16, 2017 | Published: 08:50 GMT, Oct 16, 2017 |
0 Comments
1277
This post was written by : Elakkiya

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் வர்த்தக ஒப்பந்தங்களில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தை  சார்ந்திருக்க வேண்டாம் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிங்டன் எச்சரித்துள்ளார்.

வடஅமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் பிரித்தானியா இணைந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வர்த்தகத்தில் நம்பிக்கை இல்லை என்று கூறும் ஒருவருடன் நீங்கள் வர்த்தக ஒப்பந்தத்தை செய்ய முயற்சிக்கின்றீர்கள். அதனால் அடுத்த சில ஆண்டுகளில் என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரெக்சிற்றுக்கு பின்னர் அமெரிக்கா போன்ற பழைய நட்பு நாடுகளுடனும் சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற புதிய பங்காளி நாடுகளுடனும் அதிகரித்துவரும் புதிய வர்த்தக தொடர்புகளை கையாள வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்திருக்கின்றார்.

அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய இரு நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் 200 பில்லியன் டொலர் வர்த்தகம் செய்கின்ற நிலையில், கடந்த ஜனவரி மாதம் வெள்ளை மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தெரேசா மே பிரித்தானியாவுக்கு ட்ரம்ப் அரசமுறை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.
பிரித்தானியாவின்; மிகப்பெரிய இறக்குமதியாளராக அமெரிக்கா உள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் பிரித்தானியாவின் ஏற்றுமதியில் 14 சதவீதம் அமெரிக்காவுக்கு சென்றது. அதேநேரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 ஒறுப்பு நாடுகளும் இணைந்து 50 சதவீதத்தை இறக்குமதி செய்தன.

இவ்வாறிருக்க கடந்த ஜூலை மாத இறுதியில் பிரித்தானியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தில் பணிபுரிவதாக ட்ரம்ப் டுவிட்டரில் தெரியப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg