Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் சட்டமூலம் அரசியலமைப்பில் நெருக்கடியை ஏற்படுத்தும்: அமைச்சர்கள் எச்சரிக்கை

In
Updated: 09:53 GMT, Oct 16, 2017 | Published: 09:50 GMT, Oct 16, 2017 |
0 Comments
1167
This post was written by : Elakkiya

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான சட்டமூலம் அரசியலமைப்பில் நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் குறித்த சட்டமூலத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்றும் வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த சட்டமூலமானது ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் நிர்வாகங்களின் அதிகாரங்களை பறிக்கும் சாத்தியத்தை உருவாக்கும் அல்லது அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், குறித்த சட்டமூலம் குறிப்பிடத்தக்க அளவில் திருத்தப்பாவிட்டால் பகிர்ந்தளிக்கப்பட்ட நிர்வாகங்கள் சட்டபூர்வ ஒப்புதலை வழங்காது என்றும் வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள வேல்ஸ் முதலமைச்சர் Carwyn Jones, தற்போதைய வடிவத்தில் குறித்த சட்டமூலத்தை தாம் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்றும் மாற்றங்கள் செய்யப்படாவிட்டால் அதனை நிராகரிப்பதற்கு வேல்ஸ் சட்டமன்றை பரிந்துரைக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மீன்வளங்கள் மற்றும் விவசாயத்துடனான பின்தங்கிய கொள்கைப் பகுதிகளில் வெஸ்ட்மினிஸ்டர் அதிகாரத்தை கைப்பற்றுவதை தவிர்ப்பதற்கு ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் நிர்வாகிகள் கூடுதல் மாற்றங்களை கோருகின்றனர்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg