Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புருவம் அழகாக திகழ சில வழிகள்

In
Published: 11:18 GMT, Oct 16, 2017 |
0 Comments
1391
icon_com
This post was written by : Kemasiya
gvdfg

புருவம் உதிர்வதற்கு பல்வேறு காரணங்கள் இருக்க கூடும். ஆனால் பெண்களின் முக அழகில் புருவமும் முக்கிய பங்கு வகிக்கின்றது. எனவே புருவம் இல்லாத பெண்களும் புருவத்தை வளர்த்து அதை சேப் செய்து கொள்ளத் தான் விரும்புவார்கள். அப்படியிருக்கையில் புருவம் உதிர்வது நிக்கவும் மற்றும் புருவம் அதிகமாக வளரவும் என வழிகள் உள்ளன என்று நோக்கலாம்.

புருவ முடியை அடர்த்தியாக மற்றும் விரைவாக வளர செய்ய பழங்காலம் முதல் நடைமுறையில் இருந்து வருவது விளக்கெண்ணெய். இது வேர்க்கால்களை புத்துணர்ச்சி அடையச் செய்து முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.  விளக்கெண்ணெயை புருவத்தில்தடவி. விரல் நுனியை கொண்டு 2-3 நிமிடம் நன்றாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் விடவும். பின்பு வெது வெதுப்பான நீரில் கழுவவும். தினமும் ஒரு முறை இதனை செய்ய வேண்டும்.

இரவு நேரத்தில் சில துளி தேங்காய் எண்ணெய்யை எடுத்து உங்கள் புருவத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரித்து  முடி வளர்ச்சி அதிகரிக்கிறது.

ஒலிவ் எண்ணெய் சில துளிகள் எடுத்து புருவத்தில் தடவவும். நன்றாக மசாஜ் செய்யவும். இரவு முழுவதும் அப்படியே விடலாம் அல்லது 30 நிமிடங்கள் கழித்து கழுவலாம். ஒலிவ் எண்ணெயுடன் தேன் சேர்த்து புருவத்தில் தடவலாம். நன்றாக மசாஜ் செய்து 10 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவலாம். தினமும் இதனை செய்வதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg