Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேசிய நல்லிணக்கத்தினை வடக்கில் இருந்தே ஆரம்பிக்கவேண்டும்: அஸ்கிரிய பீடம்!

In இலங்கை
Published: 03:01 GMT, Oct 17, 2017 |
0 Comments
1208
This post was written by : Ravivarman
banner-1

தேசிய நல்லிணக்கம் தெற்கில் உருவாக வேண்டுமானால், வடக்கில் இருந்தே நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு பொறுப்பான மகாநாயக்கர் நுகேதன்னே பஞ்ஞானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அஸ்கிரிய பீடத்தின் சார்பில் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பௌத்த மதத்துக்காக வட மாகாணத்துக்கு பொறுப்பாகச் செயற்படுவதற்கு அஸ்கிரிய பீடம் என்னை நியமித்துள்ளது. வடக்கு மக்களுடன் சகோதரத்துவத்துடனும், நல்லிணக்கத்துடனும் செயற்பட வட மத்திய மக்களும், நாமும் விருப்பத்துடன் உள்ளோம்.

யுத்த காலத்தில் வடக்கில் காணப்பட்ட பௌத்த சின்னங்கள் அழிவடைந்துள்ளன. வடக்கிலுள்ள அரசியல் தலைவர்கள் இதனை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்” என மகாநாயக்கர் நுகேதன்னே பஞ்ஞானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg