Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை அணியை மீண்டும் வீழ்த்தியது பாகிஸ்தான்

In கிாிக்கட்
Updated: 04:11 GMT, Oct 17, 2017 | Published: 04:09 GMT, Oct 17, 2017 |
0 Comments
1410
icon_com
This post was written by : Elakkiya
201710170052126000_1_pak-vs-sri._L_styvpf

இலங்கை அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 32 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது.

அபுதாபியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணியின் சார்பில் பாபர் அசாம் 101 ஓட்டங்களையும் சதாப் கான் 52 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் லஹிரு கமேஜ் 4 விக்கெட்களையும் திசார பெரேரா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து 220 என்ற ஓட்ட இலக்குடன் துடுப்பாட்டத்தில் களமிறங்கிய இலங்கை அணி 48 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 187 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள 32 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றியை தனதாக்கியது.

இலங்கை அணியின் சார்பில் அணித்தலைவர் உபுல் தரங்க 112 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பாகிஸ்தான் அணியின் சார்பில் பந்து வீச்சில் சதாப் கான் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக சதாப் கான் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் 2:0 என்ற ரீதியில் பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg