Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய கடற்படையுடன் இணைந்தது அதி நவீன போர்க்கப்பல்!

In இந்தியா
Updated: 05:43 GMT, Oct 17, 2017 | Published: 05:43 GMT, Oct 17, 2017 |
0 Comments
1644
This post was written by : Puvanes

முற்றிலும் இந்திய தொழில் நுட்பத்தில் கட்டப்பட்ட ஐ.என்.எஸ். கில்டன் எனப்படும் அதி நவீன போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் கட்டப்பட்ட குறித்த போர்க்கப்பலானது அங்கிருந்து விசாகபட்டிணத்திற்கு கொண்டு வரப்பட்டு, நேற்றைய தினம், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலமாக இந்திய கடற்படையுடன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

3 ஆயிரம் தொன் எடை கொண்ட இந்தக் கப்பல் 109 மீற்றர் நீளத்தினையும், 12.8 மீற்றர் அகலத்தினையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதோடு, நீர் முழ்கிக் கப்பல்களையும் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏவுகணைகள், பீரங்கிகள், அதி நவீன துப்பாக்கிகள் மட்டுமல்லாது ஏராளமான ஆயுதங்களும் ஐ.என்.எஸ். கில்டன் கப்பலில் பொருத்தப்பட்டுள்ள அதேசமயம், சென்சார் மற்றும் தீ கட்டுப்பாட்டுக் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

மணிக்கு 46 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் இந்தக் கப்பலானது தொலைவில் உள்ள நீர்மூழ்கிக் கப்பலையும் துல்லியமாக கண்டுபிடித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்திய கடற்படைக்கு வலுசேர்க்கும் குறித்த கப்பலானது கடற்படையின் பாதுகாப்பு அரணாக திகழும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg