Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிவகரனுக்கு குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு அழைப்பாணை

In இலங்கை
Updated: 10:34 GMT, Oct 17, 2017 | Published: 10:33 GMT, Oct 17, 2017 |
0 Comments
1280
icon_com
This post was written by : Elakkiya
sivakaran-01

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரனை எதிர்வரும் 20 ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு கொழும்பு குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த 2 ஆம் திகதியும் விசாரணைக்கு வருமாறு சிவகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் சுகயீனம் காரணமாக விசாரணைக்கு வர முடியாது என அவர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பு குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவின் 2 ஆம் பிரிவில் ஆஜராகுமாறு சிவகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அழைப்பாணைக் கடிதம் வவுனியா பயங்கரவாத விசாரணைப்பிரிவினுடாக இன்று (செவ்வாய்க்கிழமை) கிடைக்கப்பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg