Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை தலைவராக ரமீஸ் அபூபக்கர் நியமனம்!

In இலங்கை
Published: 14:10 GMT, Oct 17, 2017 |
0 Comments
1065
icon_com
This post was written by : Vithushagan
1 (1)

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் சமூகவியல் துறைக்கான முதலாவது தலைவராக கலாநிதி ரமீஸ் அபூபக்கர், நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலை பாடமாகக் கற்ற முதலாவது மாணவர் தொகுதியைச் சேர்ந்த கலாநிதி ரமீஸ் அபூபக்கர், அந்தத் துறையின் முதலாவது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பினை முதல் தர சித்தியுடன் பூர்த்தி செய்த ரமீஸ், சமூகவியலில் தனது முதுமானிப் பட்டத்தினை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார்.

அதன் பின்னர், புலமைப் பரிசில் பெற்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் சென்ற அவர், அங்கு தனது கலாநிதிப்பட்டப் படிப்பை பூர்த்தி செய்தார்.

சமூகவியல் தலைவராக நியமனம் பெறுவதற்கு முன்னர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர் நலன்புரிப் பிரிவின் பொறுப்பாளராக ரமீஸ் பணியாற்றி வந்தார். இவர், சமூகவியல் தொடர்பில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg