Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானை எதிர்கொள்ளும் திசேர பெரேரா தலைமையிலான இலங்கை ரி-வென்ரி அணி இதுதான்!

In கிாிக்கட்
Updated: 06:47 GMT, Oct 18, 2017 | Published: 06:47 GMT, Oct 18, 2017 |
0 Comments
3491
This post was written by : Anojkiyan

பாகிஸ்தானில் சென்று விளையாடும் இலங்கை ரி-ருவென்ரி அணிக்கு சகலதுறை வீரரான திசேர பெரேரா தலைமை தாங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே இலங்கை வீரர்கள் மீது பாகிஸ்தானில் வைத்து தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதால் தற்போது அங்கு சென்று விளையாட உபுல் தரங்க உள்ளிட்ட சில வீரர்கள் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகின்றது.

ஆகையால் சமீபத்தில் உலக பதினொருவர் அணிக்காக சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்ற திசேர பெரேரா அணிக்கு தலைமை தாங்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட முக்கிய வீரர்கள் குறித்த போட்டியில் விளையாடுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இதற்கான புதிய அணி அறிவிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், டில்ஷான் முனவீர, தனுஷ்க குணதிலக, தசுன் ஷானக, இசுரு உதான, லஹிரு கமகே, ஷெஹான் ஜயசூரிய, மிலிந்த சிறிவர்தன, சச்சித்ர சேனநாயக்க, லக்ஷன் சண்டகன், சீக்குகே பிரசன்னா, ஆக்ஷன் ப்ரியஞ்சன், சதீர சமரவிக்ரம நிரோஷன் டிக்வெல்ல, வணிந்து ஹசரங்க ஆகிய வீரர்கள் தெரிவாகலாம் என நம்பப்படுகின்றது

மூன்று போட்டிகளை கொண்ட ரி-ருவென்ரி தொடரின், மூன்றாவதும் இறுதியுமான ரி-ருவென்ரி போட்டி, எதிர்வரும் 29ஆம் திகதி பாகிஸ்தானின் லாகூர் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg