Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை அணிக்கெதிரான ரி-ருவென்ரி தொடர்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு

In கிாிக்கட்
Published: 08:40 GMT, Oct 18, 2017 |
0 Comments
1314
icon_com
This post was written by : Anojkiyan
haz

இலங்கை கிரிக்கெட் அணியை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் ரி-ருவென்ரி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் பாகிம் அஷ்ரப், அமீர் யாமின், உஷ்மான் ஷென்வாரி மற்றும் உமர் அமீன் ஆகியோர் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஜூனைத் கான் மற்றும் வஹாப் ரீயாஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

சப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணி விபரம்: சப்ராஸ் அஹமட் (அணித்தலைவர்), பாஹர் ஸமான், அஹமட் ஷெசாத், பாபர் அசாம், மொஹமட் ஹபீஸ், சொஹைப் மலிக், இமாட் வாசிம், மொஹமட் நவாஸ், ஷதாப் கான், பாகிம் அஷ்ரப், ஹசன் அலி, அமீர் யாமின், மொஹமட் அமீர், ருமான் ரயீஸ், உஷ்மான் ஷென்வாரி, உமர் அமீன்.

இரு அணிகளுக்கிடையிலான முதல் இரு ரி-ருவென்ரி போட்டிகளும் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் அபுதாபியிலும், இறுதிபோட்டி 29ஆம் திகதி பாகிஸ்தானின் லாகூர் மைதானத்திலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg