Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கினிகத்தேனையில் 220 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கரவண்டி: மூவர் படுகாயம்

In இலங்கை
Updated: 10:51 GMT, Oct 18, 2017 | Published: 10:50 GMT, Oct 18, 2017 |
0 Comments
1258
icon_com
This post was written by : Elakkiya
DSC04861

கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 220 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து ஹட்டனுக்கு சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியே இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனமே விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

DSC04834 DSC04836 DSC04839

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg