Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கிக்கு அங்கத்துவம் கிடைக்கும்

In
Updated: 11:37 GMT, Oct 18, 2017 | Published: 11:37 GMT, Oct 18, 2017 |
0 Comments
1092
icon_com
This post was written by : Suganthini
turkey

இறுதித் தருணத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கிக்கு அங்கத்துவம் கிடைக்குமென, போலாந்து ஜனாதிபதி ஆண்ட்ரேஜ் டுடா ( Andrzej Duda ) தெரிவித்துள்ளார்.

போலாந்தில் நேற்று (செவ்வாய்;க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியை துருக்கியும் ஐரோப்பிய ஒன்றியமும் தொடர்ந்து முன்னெடுக்குமென்று நான் நம்புகின்றேன். இந்நிலையில், துருக்கியானது இறுதிச் சந்தர்ப்பத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் பெற்றுவிடுமென்றும் நான் நம்புகின்றேன்’ என்றார்.

‘எனவே, துருக்கியானது ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் போலாந்து ஆதரவை வழங்கும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg