Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முட்டை – இறால் பொரியல்!

In
Published: 10:09 GMT, Oct 19, 2017 |
0 Comments
1592
icon_com
This post was written by : Vithushagan
Onion Prawn omelette 010

தேவையான பொருட்கள் 

இறால் – 100கிராம்
முட்டை- 3
உருளைக்கிழங்கு- 1 (பெரியது)
வெங்காயம், பச்சை மிளகாய் -1/2 கப்
கறிவேப்பிலை- சிறிதளவு
உப்பு ,எண்ணெய்,தண்ணீர் -தேவையானளவு
மிளகாய் தூள் -2 தேக்கரண்டி

செய்முறை 

இறாலை ஒரு கப் தண்ணீர் விட்டு நன்கு அவிக்கவும் .உருளைக்கிழங்கை சுத்தம் செய்து ஸ்கிறேப்பரால் துருவிக் கொள்ளவும்.

சட்டியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய் , கறிவேப்பிலையை அரைப்பதத்திற்கு வதக்கவும்.  பின் துருவிய உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும்.

அவித்த இறாலை நன்கு கரண்டியால் மசித்து வைக்கவும் அதன் பின்னர் முட்டையை உப்பு சேர்த்து நன்கு கரண்டியால் அல்லது பீட்டரால் அடிக்கவும்.

அதனுள் மசித்து வைத்த இறால் , வதக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, துருவிய உருளைக்கிழங்கு, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

சட்டியில் எண்ணெய் விட்டு சூடானதும் முட்டைக்கலவையை ஊற்றி ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி நன்கு வெந்ததும் எடுக்கவும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg