Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளுராட்சி தேர்தல் வருமா? வராதா? – மஹிந்த அணி கேள்வி

In இலங்கை
Published: 05:55 GMT, Oct 20, 2017 |
0 Comments
1139
icon_com
This post was written by : Arul Jesu
alluth g

உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படுமா? இல்லையா என்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மிகவிரைவில் தமது தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
இந்த ஊடகசந்திப்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகும் போது எல்லை நிர்ணயம் சம்பந்தமான பிரச்சினையுடன் அமைச்சர் மனோ கணேசன் நீதிமன்றத்தை நாட தயாராவதாக குறிப்பிட்டார்.

எனவே இதன் மூலம் அரசாங்கம் 2020 ஆம் ஆண்டு வரையில் எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கு தயாரில்லை என்ற விடயமே புலப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆகவே ஜனவரி மாதத்தில் தேர்தலை நடத்த தவறினால் ஒவ்வொரு அமைச்சுக்களையும் முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்த வேண்டி ஏற்படும் எனவும் அவர் கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg