Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேச்சுவார்த்தைகளை முன்னோக்கி நகர்த்த திட்டம் கோரும் பிரதமர் மே

In
Updated: 06:21 GMT, Oct 20, 2017 | Published: 06:21 GMT, Oct 20, 2017 |
0 Comments
1214
This post was written by : Risha

பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளை முன்னோக்கி நகர்த்துவது தொடர்பிலான ஒரு திட்டமொன்றை வகுக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை பிரதமர் தெரேசா மே வலியுறுத்தியுள்ளார்.

பிரஸ்சல்ஸில் நேற்று ((வியாழக்கிழமை) நடைபெற்ற உச்சிமாநாட்டில் கலந்துக் கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் எஞ்சிய 27 உறுப்பு நாடுகளுடன் பொருளாதார உறவை தொடர பிரித்தானியா எதிர்பார்த்துள்ளது.

ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் பொருளாதார உறவை தொடர்வதற்கு முன்னர், குடிமக்கள் உரிமைகள், நிதி தீர்வு மற்றும் அயர்லாந்து எல்லை பிரச்சினை ஆகிய மூன்று முக்கிய விடயங்களில் முன்னேற்றம் எட்டப்படுவது அவசியம் என ஐரோப்பிய ஒன்றிய பேச்சாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg