Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சிக்கு சுற்றாடலுக்கான நீலப்பசுமை விருது!

In இலங்கை
Updated: 11:41 GMT, Oct 20, 2017 | Published: 11:41 GMT, Oct 20, 2017 |
0 Comments
1231
This post was written by : Ravivarman

சுற்றாடலுக்கான நீலப்பசுமை விருதினை கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் பெற்றுக்கொண்டுள்ளது.

இலங்கையின் ஜனாதிபதியினால் சுற்றாடலுக்கான நீலப்பசுமை விருது வழங்கும் வைபவம் மத்திய சுற்றாடல் அதிகார சபையால் ஒழுங்குபடுத்தப்பட்டு அண்மையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போதே இம்முறை நீலப்பசுமை விருது கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுற்றாடல் நலன் பேணும் பண்ணைகளில், கிளிநொச்சி  பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் தெரிவாகி விருதினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்விருது குறித்து நிலையத்தின் மேலதிகப் பணிப்பாளர் சி.ஜே.அரசகேசரி கருத்துத் தெரிவிக்கையில்,
”போரினால் பாதிப்படைந்து மீள்கட்டுமானப் பணிகள், ஆராய்ச்சிகள் மற்றும் சுற்றயல் சார்ந்த சகல விடயங்களிலும் துரித கதியில் முன்னேறி, இந் நிலையத்தில் பணியாற்றும் சகல தரப்பினரிதும் ஒத்துழைப்புடன் இவ்விருது பெற்றுக்கொள்ளப்பட்டமை மகிழ்ச்சியளிக்கின்றது.

எமது நிலையத்தை சார்ந்த அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பங்களிப்பினாலேயே இந்த உன்னத நிலையை எட்ட முடிந்துள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

Untitled

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg