Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலவசத்திட்டங்களை வழங்கி மக்களை கவர பா.ஜ.க.விற்கு சலுகை: சிதம்பரம் குற்றச்சாட்டு

In இந்தியா
Published: 12:13 GMT, Oct 20, 2017 |
0 Comments
1225
icon_com
This post was written by : Kemasiya
chidambaram_6

குஜராத் வாக்காளர்களை கவரும் வகையில், இலவச சேவை மற்றும் திட்டங்களை அறிவிக்க பா.ஜ.க.விற்கு தேர்தல் ஆணையகத்தினால் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் மோடியின் ஆட்சியை கேலி செய்யும் வகையில்,  முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையகம் குஜராத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்காததை கண்டிக்கும் விதத்தில், இவ்வாறான கேலி குற்றச்சாட்டை ப.சிதம்பரம், இன்றைய தனது டுவிட்டர் பதிவின் ஊடாக தெரிவித்துள்ளார்.

இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 9 ஆம் திகதி சட்டப்பேரவை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், குஜராத்தின் தேர்தல் திகதி அறிவிக்கப்படவில்லை.  எனவே இமாச்சல பிரதேசத்துடன் சேர்த்து, குஜராத் தேர்தல் நடத்தாததை கண்டித்து, காங்கிரஸ் தரப்பில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில், ப.சிதம்பரம் இன்று மேற்கண்டவாறு குற்றம் சாட்டியுள்ளார். எனினும் எதிர்வரும் டிசெம்பர் 18 ஆம் திகதிக்கு முன்னர், குஜராத் தேர்தலும் நிறைவடையும் என தெரிவித்திருந்த தேர்தல் ஆணையகம், தேர்தலுக்கான உரிய திகதியை இது வரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg