Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரிய நெருக்கடி: ட்ரம்ப்புடன் கலந்துரையாட தீர்மானம்

In உலகம்
Published: 11:08 GMT, Oct 23, 2017 |
0 Comments
1057
icon_com
This post was written by : Suganthini
abe 33

ஜப்பானுக்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் விஜயத்தின்போது, வடகொரிய விவகாரம் தொடர்பில் கலந்துரையாடப்படும் என, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் நேற்று நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில் பிரதமர் ஷின்சோ அபே வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, ஊடகவியலாளர்கள் சந்திப்பை இன்று (திங்கட்கிழமை) நடத்தியுள்ளார். இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அவரிடமிருந்து தொலைபேசி மூலமாகத் தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், வடகொரிய பிரச்சினை மற்றும் அப்பிரச்சினையை சுமூகமாகக் கையாண்டு தீர்வைக் காண்பது தொடர்பில் கலந்துரையாடத் தீர்மானித்துள்ளேன், இந்த  விவகாரம் தொடர்பில் இரு நாடுகளும் நெருக்கமாகச் செயற்படவும் தீர்மானித்துள்ளோம்’ என்றார்.

‘அத்துடன், வடகொரிய விவகாரம் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் ஆகியோருடனும் ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்புக் கூட்டத்தின்போது கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg