Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சைட்டம் விவகாரம்- நவம்பரில் தொடங்குகிறது உண்ணாவிரத போராட்டம்?

In இலங்கை
Updated: 04:07 GMT, Oct 26, 2017 | Published: 03:16 GMT, Oct 26, 2017 |
0 Comments
1354
This post was written by : Elakkiya

சைட்டம் மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் தீர்வு இன்றேல் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் மருத்துவபீட மாணவர்களின் பெற்றோர் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுப்பர் என முன்னிலை சோசலிச கட்சி தெரிவித்துள்ளது.

சைட்டம் மருத்துவக் கல்லூரி பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாக கூறி கேலியான செயற்பாடுகளில் ஈடுபடும் அரசாங்கம் அவற்றை நிறுத்தி உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அப்பொறுப்பிலிருந்து விலகினால் நவம்பர் முதலாம் திகதி முதல் அனைத்து பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களின் பெற்றோர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் குதிப்பர் என்றும் முன்னிலை சோசலிச கட்சி எச்சரித்துள்ளது.

நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற முன்னிலை சோசலிச கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் அமைப்பாளர் புபுது ஜயகொட மேற்படி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சைட்டம் மருத்துவக் கல்லூரி தொடர்பான பிரச்சினைகள் கடந்த ஜனவரி மாதம் முதல் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் இது தொடர்பில் உரிய தீர்வை வழங்குவதற்கு அரசாங்கம் காலதாமதம் செய்கின்றது.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துரையாடி தீர்வினை தருவதாக கூறப்பட்டது. எனினும் தொடர்ந்து இழுத்தடிப்பு நிலையே தொடர்கின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg