Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு இனமுரண்பாடுகளை தோற்றுவிக்கக் கூடாது!

In இலங்கை
Published: 04:07 GMT, Oct 26, 2017 |
0 Comments
1233
This post was written by : Varshini

இலங்கையின் வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணையில் இருந்த மூன்று தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான வழக்குகளை, சாட்சிகளின் பாதுகாப்பு கருதியே அநுராதபுரத்திற்கு மாற்றியுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. அவ்வாறு சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் காணப்படுமாயின் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி, குறிப்பிட்ட நீதிமன்றத்திலேயே வழக்குகளை விசாரணை செய்ய வேண்டும். மாறாக பிறமொழி பேசும் மாவட்டங்களுக்கு இவ்வாறு வழக்குகளை மாற்றுவதானது, இன ரீதியான முரண்பாடுகளை தோற்றுவிப்பதாகவே அமையும் என தேசிய சமாதான பேரவை குறிப்பிட்டுள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த ஒரு மாத காலமாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில், தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளதோடு, தொடர்ச்சியாக வகுப்புகளையும் பகிஷ்கரித்து வருகின்றனர். இந்நிலையில், தேசிய சமாதான பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் அரசியல் காரணங்களுக்காக குற்றமிழைத்தவர்கள் தொடர்பில், ஐ.நா. பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இன ரீதியான பாகுபாடு இன்றி செயற்படுவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. அதற்கேற்ப செயற்படுவது அவசியம் என்றும் தேசிய சமாதான பேரவை வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, கடந்த காலத்தில் இடம்பெற்ற ஜே.வி.பி. கிளர்ச்சியின்போது கடுமையான வன்முறைகளில் ஈடுபட்டோர் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டனர். இவ்விடயத்தையும் கருத்திற்கொண்டு இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டுமென தேசிய சமாதான பேரவை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg