Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விறுவிறுப்படையும் ஒருநாள் தொடர்: தொடரை சமன் செய்தது இந்தியா

In கிாிக்கட்
Updated: 04:23 GMT, Oct 26, 2017 | Published: 04:23 GMT, Oct 26, 2017 |
0 Comments
1449
This post was written by : Anojkiyan

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமநிலைப்படுத்தியுள்ளது.

நேற்று (புதன்கிழமை) புனே மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 230 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக ஹென்றி நிக்கோல்ஸ் 42 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளை பெற்றுக்கொண்டார்.

இதனைதொடர்ந்து 231 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி, 46 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக ஷிகார் தவான் 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக நியூசிலாந்து அணியின் முக்கிய மூன்று விக்கெட்டுகளை சாய்த்த புவனேஸ்வர் குமார் தெரிவுசெய்யப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg