Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கென்ய எதிர்க்கட்சி எதிர்ப்பு இயக்கமாக மாறும் – ஒடின்கா

In உலகம்
Updated: 05:10 GMT, Oct 26, 2017 | Published: 05:10 GMT, Oct 26, 2017 |
0 Comments
1212
This post was written by : Risha

கென்யாவின் எதிர்க்கட்சியானது, நாட்டின் எதிர்ப்பு இயக்கமாக மாறும் என கடந்த ஓகஸ்ட் மாத ஜனாதிபதி தேர்தலில் தோல்விகண்ட எதிர்க்கட்சி தலைவர் ரைலா ஒடின்கா தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) மீண்டும் நடைபெற்றுவரும் சர்ச்சைக்குரிய ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்து, நேற்று நைரோபியில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், மக்களுக்கு நீதி இல்லை என்றால், அரசாங்கத்தில் சமாதானம் இருக்காது. எனவே, இன்று நடைபெறும் ஜனாதிபதி தேர்தலை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்றார்.

கென்யாவில் கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முறைக்கேடு இடம்பெற்றதாக எதிர்க்கட்சி தலைவர் வழக்கு தாக்கல் செய்தார். இதனையடுத்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய இன்று மீண்டும் தேர்தல் நடைபெறுகிறது.

ஆனால், மீண்டும் தேர்தல் நடத்தப்படுகின்ற போதிலும் அதில் ஏற்படக்கூடிய முறைக்கேடுகளை தவிர்ப்பதற்கு தேர்தல் ஆணையம் உரிய சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள தவறியுள்ளதாக தெரிவித்து ஒடின்கா தேர்தலை புறக்கணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg