Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏறாவூர் இரட்டைப் படுகொலை வழக்கு- சந்தேகநபர்கள் இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

In இலங்கை
Updated: 05:57 GMT, Oct 26, 2017 | Published: 05:56 GMT, Oct 26, 2017 |
0 Comments
1383
This post was written by : Elakkiya

ஏறாவூரில் கடந்த வருடம் இடம்பெற்ற தாய் மற்றும் மகள் இரட்டைப் படுகொலை வழக்கின் சந்தேகநபர்கள் இருவருக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் நேற்றையதினம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய மொஹமட் இஸ்மாயில் மொஹமட்; ரிஷ்வி மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி ஏறாவூர் நகர முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நூர்முஹம்மது உஸைரா என்கின்ற தாயும் அவருடைய மகளான ஜெனீராபானு மாஹிர் என்பவரும் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக, அபூபக்கர் மொஹமட் பிலால், இஸ்மாயில் மொஹமட் பாஹிர், இஸ்மாயில் சப்ரின், கலீலுர் ரஹ்மான் அஹமட் றாசிம், புஹாரி முஹம்மது அஸ்ஹர், வசம்பு என்றழைக்கப்படும் உஸனார் மொஹமட் தில்ஷான் ஆகிய ஆறுபேரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் அபூபக்கர் மொஹமட் பிலால், இஸ்மாயில் மொஹமட் பாஹிர், இஸ்மாயில் சப்ரின், கலீலுர் ரஹ்மான் அஹமட் றாசிம் ஆகியோர் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் புஹாரி முஹம்மது அஸ்ஹர், உஸனார் மொஹமட் தில்ஷான் ஆகிய இருவருக்குமே தற்போது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் சந்தேகநபரகள் ஆறுபேரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg