Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியூசிலாந்திற்கான புதிய பிரதமர் பதவியேற்பு!

In உலகம்
Updated: 06:26 GMT, Oct 26, 2017 | Published: 06:26 GMT, Oct 26, 2017 |
0 Comments
1252
This post was written by : Risha

நியூசிலாந்தின் 40ஆவது பிரதமராக ஜெசிந்தா ஆர்டன் இன்று (வியாழக்கிழமை) பதவியேற்றார்.

இவர் நியூசிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமர் என்பதுடன், 1872ஆம் ஆண்டின் பின்னர் தெரிவுசெய்யப்பட்ட இளைய தலைவர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

பதவியேற்பின் கருத்து தெரிவித்த ஜெசிந்தா ஆர்டன், ”அரசாங்கத்தின் இலக்கை அடைவதற்கு கடுமையாக உழைக்க வேண்டிய பொறுப்பு நியூசிலாந்து பிரஜைகளான எம் ஒவ்வொருவருக்கும் உண்டு. அந்தவகையில் நியூசிலாந்தில் நேர்மறையான வித்தியாசத்தை ஏற்படுத்த அனைவருடனும் இணைந்து பணிபுரிவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அதன்படி, கட்சி வேறுபாடின்றி நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் சேவையாற்ற கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.

நியூசிலாந்தில் கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

ஆளும் தேசிய கட்சி 56 இடங்களிலும், தொழிலாளர் கட்சி 46 இடங்களிலும் வெற்றி பெற்றன. சிறிய கட்சியான நியூசிலாந்து ஃபர்ஸ்ட் கட்சி 9 இடங்களிலும், பசுமைக்கட்சி 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.

ஆட்சியமைக்க 61 உறுப்பினர்களின் ஆதரவை பெற வேண்டிய நிலையில், நியூசிலாந்து ஃபர்ஸ்ட் மற்றும் பசுமைக் கட்சி ஆகியன தொழிலாளர் கட்சிக்கு ஆதரவை வெளிப்படுத்தியதை அடுத்து ஆர்டன் பிரதமாக தெரிவுசெய்யப்பட்டார். இதன்மூலம், ஒரு தசாப்த காலமாக நீடித்த தேசிய கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg