Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தாஜ்மஹாலை சுத்தப்படுத்திய உ.பி முதலமைச்சர்

In இந்தியா
Updated: 07:02 GMT, Oct 26, 2017 | Published: 06:36 GMT, Oct 26, 2017 |
0 Comments
1304
This post was written by : Kemasiya

தாஜ்மஹாலை சுத்தப்படுத்தும் தூய்மை பணியை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மேற்கொண்டுள்ளார் .

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இன்று காலை (வியாழக்கிழமை) ஆக்ராவை சென்றடைந்தார். அங்கிருந்து தாஜ்மாஹால் சென்ற அவர், அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டார்.

பா.ஜ.க.சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆதித்யநாத், உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக பதவி வகித்து வருகின்றார். இவர் அண்மையில் சுற்றுலாத்துறை பட்டியலில் இருந்து தாஜ்மஹாலின்பெயரை நீக்கியிருந்தார்.

அதை தொடர்ந்து தாஜ்மஹால் ஒரு சிவன் கோவில் இருந்த இடத்தை இடித்து கட்டப்பட்டது என்பது உட்பட பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

இந் நிலையில், தான் முன்வைத்த கருத்துக்களை மூடி மறைக்கவே, யோகி ஆதித்யநாத் இவ்வாறு தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளார் என்று விமா்சனங்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg