Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியில் புதிய கட்டடத் தொகுதி திறந்து வைப்பு

In இலங்கை
Updated: 06:50 GMT, Oct 26, 2017 | Published: 06:50 GMT, Oct 26, 2017 |
0 Comments
1251
This post was written by : Elakkiya

மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான வகுப்பறை கட்டடத்தொகுதி வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரனால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் தலைமையில் நேற்று (புதன்கிழமை) மாலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக பங்கேற்றிருந்த வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் வகுப்பறை கட்டிடத்தொகுதியை திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியான், யூ.என்.ஹபிற்டாட் நிறுவனத்தின் சிரேஸ்ட ஆலோசகர் ஐ.ஏ.ஹமீட், யூ.என்.ஹபிற்டாட் திட்ட முகாமையாளர் எம்.எஸ்.எம்.ஆலிம் ஆகியோருடன், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் பங்கேற்றிருந்தனர்.

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் யூ.என்.ஹபிற்டாட் நிறுவனத்தின் அமுலாக்கத்துடன் குறித்த வகுப்பறைக் கட்டிடத்தொகுதி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_9009IMG_9010IMG_9013IMG_9072

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg