Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொண்டமானின் பெயர் நீக்கம்! – தொடர் ஆர்ப்பாட்டத்தால் ஹட்டனில் பதற்றம்

In இலங்கை
Published: 06:52 GMT, Oct 26, 2017 |
0 Comments
1264
This post was written by : Varshini

ஹட்டனில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயரை மாற்றியதால் கொதித்தெழுந்துள்ள மக்கள், தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதோடு, பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். ஆர்ப்பாட்டம் காரணமாக பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானால், ஜேர்மனியின் உதவியில் கடந்த 1998ஆம் ஆண்டு தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டது. அவரது மறைவிற்கு பின்னர், கடந்த 2000ஆம் ஆண்டு அன்றைய அரசாங்கத்தின் அமைச்சராக இருந்த ஆறுமுகன் தொண்டமானால் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் திறந்துவைக்கப்பட்டது.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய பிள்ளைகளின் தொழிற்பயிற்சிக்காக ஆரம்பிக்கப்பட்ட இப் பயிற்சி நிலையமானது, நல்லாட்சி அரசாங்கத்தின் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் கீழ் தற்போது இயங்குகின்ற நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பூல்பேங்க் தொழிற்பயிற்சி நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முதல் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, இன்று காலை முதல் மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

thondaman training center (2) thondaman training center (3) thondaman training center (8) thondaman training center (6) thondaman training center (7) thondaman training center (1) thondaman training center (4) thondaman training center (5)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg